Pages

Tuesday, April 20, 2010

ஜோக்ஸ்

"ஏம்பா நம்ம டிங்கு கோவமா இருக்கான்"
"யாரோ டெங்குவை ஒழிப்போம்னு எழுதறுதுக்கு பதிலா
டிங்குவை ஒழிப்போம்னு எழுதிட்டாங்களாம்"
*********
"நம்ம ஆடிட்டர் பொண்ணு ஓடிப் போயிருச்சு"
"அப்புறம்"
"ஆடிட்டார்"

*********

"நம்ம சமுத்திரகனி சார்
டாப் டென் ஆர்த்திய வைச்சு
படம் எடுத்தா என்ன பேரு வைப்பாரு"

"சம்போ சிவ ஜம்போ"

***************

Wednesday, February 10, 2010

தெருக்’குரல்’




தோண்டுக ஓர்குழியை கடப்பாரை கொண்டு
தோண்டியபின் ஊண்டுக ஓர்செடியை.


**********

Sunday, December 20, 2009

டீலா-நோ-டீலா மற்றும் அதிர்ஷ்டம் vs துரதிர்ஷ்டம்--குறும்படம்













சன் டிவியில் நேற்று(19/Dec/சனிக்கிழமை) ஒலிபரப்பான டீலா-நோ டீலா நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட ஒரு இளம்பெண், தன்னைப் பற்றி கூறுகையில்
தன்னை எல்லோரும் பொதுவாக unlucky என்று சொல்வார்கள்
என்றும், தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளம்புகையில்
காலையில் தன் வீட்டு கார் டிரைவர் லேட்டாக வந்தார் எனவும்,
பின் காரில் வருகையில் டயர் பங்ச்சர் ஆகிவிட்டதாகவும்,அதன்
பின்னர் தன் நண்பருக்கு அழைத்து, அவருடைய காரில் வருகையில்
கடைசியில் அதுவும் பின்னால் பஸ் மோதி ஆக்ஸிடெண்ட்
ஆகிவிட்டதாகவும் அத்தனை தடங்கலையும் தாண்டி, தான் அந்த
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் கூறினார். பின்
தன்னம்பிக்கையுடன் விளையாடிய அவர் கடைசியில் 2000 ரூபாயுடன்
வீட்டிற்குச் சென்றார்.அவர் சொன்னதை எல்லாம் பார்த்த எனக்கு
YOU TUBE-ல் பார்த்த WRONG SIDE OF THE BED என்ற குரும்படம் தான்
ஞாபகத்திற்கு வந்தது.நீங்களும் பாருங்களேன்.

http://www.youtube.com/watch?v=uR_PzFZgsHU&feature=related -


video

வணக்கம்

என் இனிய பிளாக் குலங்களே!உங்கள் எல்லோருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் !இந்த வலைப்பூவின் மூலமாக என் அனுபவங்களை, பார்வைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் !